Browsing Category
கதம்பம்
இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துகொள்!
ரவீந்திரநாத் தாகூரின் பொன்மொழிகள்:
1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.
2. உயர்ந்த பண்பாடு என்ற…
நம்பிக்கை ஊற்று அவசியம்!
‘தாய்’ சிலேட்:
நம்பிக்கை என்பது
ஒரு நாளில் உதிர்ந்துவிடும்
பூவாக இருந்துவிடக் கூடாது;
மேலும் மேலும் மலரை உருவாக்கும்
செடியாக இருக்க வேண்டும்!
- அரிஸ்டாட்டில்
உலகை வெல்லும் வழி!
இன்றைய நச்:
இந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில், தோல்வி வந்து விடுமோ என்று பயந்ததேயில்லை. மன சஞ்சலமின்றி முன்னேறிப் போய்க் கொண்டிருந்தேன்.
- மாவீரன்…
நம்மை நாமே உணர்வோம்!
தாய் சிலேட்:
நீங்கள் உங்களைப்பற்றி
நல்லவிதமாக உணராதவரை
இன்னொரு நபரை
நல்லவிதமாக
உணரச் செய்வது
சாத்தியமில்லை!
- ராபின் ஷர்மா
உதவும் நெஞ்சம் கொண்டவர்கள் கொஞ்சம் பேர் தான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவிசெய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவன் இவனென்று - உன்னை
நடுவில் வைத்து போற்றுமடா
இன்ப உலகில் செல்வமதிகம்
இதயந்தான்…
புத்தகங்களால் புகழ் பெறுவோம்!
இன்றைய நச்:
பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாக மாற முடியாது;
பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது;
பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்!
- ஈரோடு தமிழன்பன்
நம்பிக்கையின் வீரியம்!
தாய் சிலேட்:
மனதில் ஒன்றைத் திட்டமிட்டு
அது நடக்கும், கிடைக்கும்
என்று நம்பினால்,
மனித மனம்
எப்பாடுபட்டாவது
அதைப் பெற்றுத் தந்துவிடும்!
- நெப்போலியன் ஹில்
நீதிமன்றங்களைவிட உயர்ந்தது மனசாட்சி!
இன்றைய நச்:
எல்லா நீதிமன்றங்களையும்விட மிகப்பெரியது உங்களுடைய மனசாட்சிதான்.
உனது ஆரோக்கியம் மூன்று கிலோ மீட்டருக்க அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வரவேண்டும்.
- மகாத்மா காந்தி
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க!
உங்கள் குழந்தைகளை
நல்லவர்களாக்க
சிறந்த வழி
அவர்களை
மகிழ்ச்சியாக
இருக்கச் செய்வதே!
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
உலகை அறிந்து கொள்!
உலகம் உன்னைத்
தெரிந்து கொள்ளும்முன்,
நீ உலகத்தைத்
தெரிந்து கொள்ள வேண்டும்!
- மகாவீரர்