Browsing Category
கதம்பம்
நல்லதை மட்டும் பின்பற்றுவோம்!
இன்றைய நச் :
எந்தச் செயலையும்
நன்கு ஆராய்ந்து,
எது நன்மைக்கு உகந்தது
என்று காண்கிறீர்களோ,
அதையே நம்பி
உறுதியாகப் பின்பற்றுங்கள்!
நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் கிடைக்கும்!
தாய் சிலேட் :
ஆரோக்கியம் உள்ளவனுக்கு
நம்பிக்கை இருக்கும்;
நம்பிக்கை உள்ளவனுக்கு
எல்லாம் இருக்கும்!
– ஹால்டேன்
வெற்றிகளை எளிதாகக் கைகொள்வோம்!
தாய் சிலேட் :
சிறு சிறு பகுதிகளாகப்
பிரித்துக்கொண்டு செய்தால்,
எந்த வேலையும்
மிகக் கடினமானதாக
இருக்காது!
– ஹென்றி போர்ட்
கடன்பட்டுள்ள வாழ்க்கை!
இன்றைய நச் :
நான் வாழ்வதற்காக
என் பெற்றோர்களுக்குக்
கடமைப்பட்டுள்ளேன்;
ஆனால் நான்
முறையாக வாழ்வதற்காக
என் ஆசிரியருக்கே பெரிதும்
கடமைப்பட்டுள்ளேன்!
– மாவீரன் அலெக்ஸாண்டர்
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!
இன்றைய நச் :
தவறுகளை ஒத்துக்கொள்ளும்
தைரியமும்,
அவற்றை விரைவில்
திருத்திக் கொள்வதற்கான
வலிமையும்தான்
வெற்றி பெறுவதற்கான
குணங்களாகும்!
- மாமேதை லெனின்
எதிர்காலம் துணிச்சல் மிக்கவர்களுக்கு சொந்தமானது!
தாய் சிலேட் :
எதிர்காலம்
அஞ்சுபவர்களுக்கு
சொந்தமானதல்ல;
அது துணிச்சல்
மிக்கவர்களுக்கு
சொந்தமானது!
- ரொனால்ட் ரீகன்
தன்னம்பிக்கையாளரே வெற்றி பெறுகிறார்!
இன்றைய நச் :
வாழ்க்கை எனும் போர்க்களத்தில்
பலமானவரோ, வேகமானவரோ
வெல்லப்போவதில்லை;
தன்னால் முடியும் என
கருதுபவரே வெற்றி பெறுகிறார்!
- புரூஸ்லி
நேரத்தைக் கடத்தாதே!
தாய் சிலேட் :
நீங்கள்
வாழ்வில் கடக்கும்
ஒவ்வொரு
நிமிடங்களும்தான்
உங்கள் எதிர்காலம்!
- கலீல் ஜிப்ரான்
முயற்சிக்கும் வெற்றிக்குமான தொடர்பு!
இன்றைய நச் :
நூறு முறை உளியால் அடித்தும்
சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை,
நூற்று ஒராவது முறை அடிக்கிறபோத உடையும்.
அது கடைசி அடியால் உடையவில்லை,
அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது!
– ஜேக்கப் ரைஸ்
ஆயிரம் உறவுகளுக்குச் சமமாகும் நண்பன்!
தாய் சிலேட் :
ஒரு நல்ல நண்பன்
ஆயிரம் உறவுகளுக்குச்
சமம்!
– பிரான்ஸ் பழமொழி