Browsing Category
திரை விமர்சனம்
‘காரி’ – பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம்!
‘ஏய்.. என்ன லந்தா’ என்று தெனாவெட்டாகப் பேசும் வசனமாகட்டும், ‘அஹ அஹ அஹ..’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பதாகட்டும், தாடியைத் தடவிக்கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்வதாகட்டும், இன்னொரு டி.ராஜேந்தர் என்று வர்ணிக்கத்தக்க அளவுக்கு அமர்க்களமாய்…
அனல் மேலே பனித்துளி – மானம் எனும் பெருவெளி!
மிகச்சில படங்களே பிரதானக் கதாபாத்திரங்களாக நம்மைக் கற்பனை செய்ய வைக்கும். அவற்றில் சில, அப்பாத்திரங்களின் வலிகளைக் கண்டு யாருக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்று பதற வைக்கும்.
ஆன்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம்பெருமாள்,…
கலகத் தலைவன் – கார்பரேட் கனவுகளைச் சூறையாடுபவன்!
திரைக்கதைக்கும் மூலக்கதைக்குமான இடைவெளி ரொம்பவும் அதிகமாக இருந்துவிடக் கூடாது; அதைப் புரிந்துகொண்டு மையத்தில் ஒரு கதையைப் பொதிந்து அதனைச் சுற்றி நெருப்புக் கோளங்களாய் காட்சிகளை அடுக்குவது ஒரு வகை வித்தை.
இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘கலகத்…
மிரள் – கிராமப்புற ‘பீட்சா’!
நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்று தேடிப் பிடித்து படம் பார்க்கும் வரிசையில் தயாரிப்பாளரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ சேர்க்கலாமா?
ஆக்சஸ் பிலிம் பேக்டரி படங்களுக்குச் செல்லும்போது, இந்த எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.…
வாடகைத்தாய் பின்னணியில் வேறு உலகம்!
புராண காலத்து யசோதா தேவகியின் வயிற்றில் உதித்த கிருஷ்ணரைத் தனது மகவாகப் பெற்றெடுத்தார்.
இந்தக் கால ‘யசோதா’வோ, சூழலின் காரணமாக வாடகைத் தாயாகி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்.
இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ்…
பரோல்: கதை சொன்ன விதத்தில் நெகிழ வைத்த இயக்குநர்!
'காதல் கசக்குதய்யா' படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் படம் ’பரோல்’.
இந்தப் படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டதோடு, டிரெய்லரில் வரும் கதைக்கு அவரே வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லர் பெரும்…
நித்தம் ஒரு வானம் – பார்த்தால் நம்பிக்கை துளிர்க்கும்!
அவநம்பிக்கை இறுகிப் போன மனதை நெகிழ்வாக்குவது எளிதல்ல; சில நேரங்களில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடன் அது நிகழும். வாழ்க்கை மீதான நம்பிக்கை பலப்படும்; அது, மிகவும் அரிதான விஷயம். அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தும் படைப்பாக…
‘காபி வித் காதல்’ – ஆறிப் போச்சு..!
ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு சென்றால் ‘ஆயிப் போச்சு..’ என்று சொல்வதையும் கேட்டிருப்போம், ‘ஆறிப் போச்சு.. பரவாயில்லையா’ என்ற வார்த்தைகளோடு சூடாக இல்லாத உணவு பரிமாறப்படுவதையும் பார்த்திருப்போம்.
சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ இதில் இரண்டாவது…
லவ் டுடே – ஒரு (?!) காதலன் காதலி கதை!
இன்றைய காதலைப் பற்றி படமெடுக்க வேண்டுமென்ற ஆசை பல இயக்குனர்களுக்கு இருக்கும். அதற்கு உருவம் கொடுப்பதைப் போல சவாலான விஷயம் வேறில்லை.
ஏனென்றால், 2000களுக்கு பிறகு மொபைல் போன் வருகையால் காதலின் பரிமாணம் நொடிக்கு நொடி மாறி வருகிறது.
அந்த…
அப்பன் – கல்மனம் கொண்டவனின் கடைசி நாட்கள்!
பாசம், நேசம், அன்பு, பண்பு என்று நெஞ்சையுருக்கும் ‘சென்டிமெண்ட்’ கதைகள் எத்தனையோ திரைப்படங்களாகியிருக்கின்றன. அக்கதைகளில் யாரோ ஒருவர் மோசமானவராக வாழ்ந்து பின் மனம் திருந்துவதாக அக்கதைகளின் முடிவு இடம்பெற்றிருக்கும்.
அவற்றில் இருந்து விலகி,…