Browsing Category
கதம்பம்
வாழ்வைப் பயனுள்ளதாக வாழ்வோம்!
தாய் சிலேட்:
எதையும் நிரூபிப்பதற்காக
நாம் இங்கில்லை;
நலமாக, மகிழ்ச்சியாக,
பயனுள்ளவர்களாக
வாழ்வதற்கே
இருக்கிறோம்!
- ஜெயமோகன்
#ஜெயமோகன் #writer_jayamohan
நிலையாமையை உணராத மனிதன்!
இன்றைய நச்:
மரணம் நிச்சயம்
என்று தெரிந்தும்
மனிதன்
ஆசையாலும்
ஆணவத்தாலும்
அலைமோதுகிறான்!
- கவியரசர் கண்ணதாசன்
அறிவும் ஆரோக்கியமும் பெருஞ்செல்வம்!
தாய் சிலேட்:
உடல் நலமும்
அறிவின் உயர்வுமே
பெருஞ்செல்வம்;
கடமையின் சிறப்பே
களங்கமில்லா வாழ்வு!
- வேதாத்திரி மகரிஷி
யாருக்கும் அடிமையாக இருக்காதே!
எதிரியாகக் கூட வாழ்ந்துவிடு; ஆனால், ஒருவருக்கும் அடிமையாக வாழாதே!- சேகுவேராவின் சிந்தனை வரிகளின் தொகுப்பிலிருந்து.
மிருகத்தை மனிதன் ஆக்கும் வாசிப்பு!
உலகத்தில் இரண்டு வகை காகிதங்கள் உள்ளன; ஒன்று மனிதனை மிருகமாக்கும் பணம்; மற்றொன்று மிருகத்தை மனிதனாக்கும் புத்தகம்!
காயங்களை ஆற்றும் காலம்!
நமக்கான ஒரு காலம் நிச்சயம் வரும். இந்தத் துயரங்கள் எல்லாம் நமக்குத்தான் நடந்ததா என நாமே சிரிக்கும்படியான காலமாக அது இருக்கும் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.
நம்மை மேன்மையடையச் செய்வதே அறிவு!
கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது; படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது; சிந்தனை அறிவை வழங்குகிறது; அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.
காலம்தான் மாற்றம் தரும் மாமருந்து!
தாய் சிலேட்:
கடந்த காலம் பற்றிய நினைவுகள்
மனிதனுள் மாற்றம் தருவதில்லை;
எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே
மனிதனுள் மாற்றத்தை விதைக்கிறது!
- புத்தர்
நெருக்கடிச் சூழலில் சிறப்பாகச் செயல்படுவோம்!
ஒரு நெருக்கடியில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதே தலைமையின் உண்மையான சோதனை! – பிரையன் ட்ரேசி.
வலியின் ஆழம் நேசிப்பில் தெரியும்!
குத்திய கத்தியின் கூர்மை என்னால் தீட்டப்பட்டது என்பதே இதில் வலி!- எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிந்தனை வரிகளின் தொகுப்பு.