Browsing Category
கதம்பம்
பிரபலமாவது ஒரு மாஜிக்!
இன்றைய நச்!
***
பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான்.
பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.
இந்த நொடியை முழுமையாக வாழுங்கள்!
இன்றைய ‘நச்’!
***
நேற்றைய கவலையை விடுங்கள்;
நாளைய கனவையும் விடுங்கள்;
வாழும் இக்கணத்திற்கான
முழுமையான உணர்வோடு இருங்கள்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- பேரறிஞர் அண்ணா
கடந்து போகும் பட்ஜெட்!
இன்றைய 'நச்'
****
கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.
உதவுவதால் இழக்கப் போவது எதுவுமில்லை!
ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது,
அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும்;
அதுபோல நாம் பிறருக்கு உதவுவதால்
நாம் இழக்க போவது எதுவுமில்லை.
அதனால் நாம் பெறும் இன்பம்
இரண்டு மடங்காகும்.
வள்ளலார்
மூடநம்பிக்கையின் பலம்!
இன்றைய ‘நச்’!
*
மூட நம்பிக்கை
பலருக்கு அழியக்கூடிய அழுக்கைப் போலிருக்கிறது;
சிலருக்கு அழியாத மச்சத்தைப் போலிருக்கிறது.
உலகம் எனும் பயிற்சிக் கூடம்!
உலகம் ஒரு பயிற்சிக் கூடம்;
அதில் நாம் நல்ல வழிகளில்
நம் வலிமையைப்
பெருக்கிக் கொண்டே
இருக்க வேண்டும்.
விவேகானந்தர்
துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழி!
கஷ்டங்கள் வரும்போது
கண்களை மூடாதீர்கள்,
அது உங்களைக் கொன்று விடும்!
கண்களைத் திறந்து பாருங்கள்
கஷ்டங்களை
வென்று விடலாம்.
- அப்துல் கலாம்
மனிதத்தோடு இருப்பவர்களின் நிலை?
இன்றைய ‘நச்’!
*
மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள் மத்தியில்
மனிதத்தோடு இருக்கிறவர்கள் தான்
குற்றவாளியைப் போல உணர நேரிடுகிறது.
முன்னேற்றத்திற்கான மூன்று வழிகள்!
ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும்
மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு.
- ஆப்பிரிக்க பழமொழி