Browsing Category
கதம்பம்
நம்பிக்கை இன்மையின் உச்சம்!
இன்றைய ‘நச்’!
*
யாரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள்
ஒரு கட்டத்தில் தன்னுடைய சமநிலை பற்றியே
சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
அன்பால் வழிநடத்துவோம்!
உன்னை நீ அறிவால் வழிநடத்து;
பிறரை நீ அன்பால் வழிநடத்து.
- பெர்னாட்ஷா
இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!
இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர்.
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…
நேர்மையின் உன்னதம்…!
இன்றைய 'நச்':
*
சாமானியமான மனிதர்களின்
நேர்மைக்கு முன்னால்
எந்தப் பிரபலமும்
உயர்ந்தவர்கள் இல்லை.
நம்முடைய மதிப்பை உயர்த்துவது!
எப்போதும் பிறரைக் குறைத்து
மதிப்பிட வேண்டாம்;
ஏனெனில் அது உங்களது
உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.
- இங்கர்சால்
கடின உழைப்பின் பலன்…!
கடுமையாக உழைத்துக்
கொண்டே இருங்கள்;
அந்த உழைப்பு நிச்சயமாக
ஏதோ ஒரு கணத்தில்
கிரீடத்தை கொண்டு வந்து
நம் தலையில் வைக்கும்!
- பாலகுமாரன்
பிரபலமாவது ஒரு மாஜிக்!
இன்றைய நச்!
***
பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான்.
பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.
இந்த நொடியை முழுமையாக வாழுங்கள்!
இன்றைய ‘நச்’!
***
நேற்றைய கவலையை விடுங்கள்;
நாளைய கனவையும் விடுங்கள்;
வாழும் இக்கணத்திற்கான
முழுமையான உணர்வோடு இருங்கள்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- பேரறிஞர் அண்ணா
கடந்து போகும் பட்ஜெட்!
இன்றைய 'நச்'
****
கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.