Browsing Category
கதம்பம்
உழைப்போம்; உயிர் வாழ்வோம்!
தாய் சிலேட் :
உயிருள்ளவரை
உழைத்து வாழ விரும்புவோம்;
உழைக்க உழைக்க
உயிர் வாழும் விருப்பம்
அதிகமாகும்!
– ஜார்ஜ் பெர்னாட்ஷா
இயங்கிக் கொண்டே இருக்கப் பழகுவோம்!
இன்றைய நச்:
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும்;
தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும்;
சுறுசுறுப்பான செயல்பாடுகள்
கொண்ட மனம் தான் வலிமை தரும்!
– லியனார்டோ டாவின்ஸி
இரக்கத்தால் இயங்கும் உலகம்!
தாய் சிலேட் :
இரக்கத்தை
அறிந்தவன்
எல்லாம்
அறிந்தவன்!
– பிரெஞ்சு பழமொழி
சவாலான வாழ்க்கையை ஏற்கப் பழகு!
இன்றைய நச்:
தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது;
பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது;
அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே
சவாலான வாழ்க்கையை வாழ்கிறான்!
- மாவோ
பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகு!
இன்றைய நச் :
எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும்;
ஆனால் அதற்காகக் கப்பல் கட்டப்படுவதில்லை;
கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு
பயணம் செய்வதற்காகத்தான்
கப்பல் தயாரிக்கப்படுகிறது!
– கிரேஸ் முர்ரே ஹாப்பிர்
எதிர்பார்ப்பில்லாமல் இரு!
தாய் சிலேட் :
சுதந்திரமாக இரு;
எவரிடமும் இருந்து
எதையும் எதிர்பார்க்காதே!
-விவேகானந்தர்
அதிர்ஷ்டம் ஒருபோதும் வெற்றியை நிர்ணயிக்காது!
தாய் சிலேட் :
வெறும் அதிர்ஷ்டத்தை
மட்டும் தேடி
ஓடும் போதுதான்,
நாம் கால்கள் இடறி
விழுந்துவிடுகிறோம்!
– ஷேக்ஸ்பியர்
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்!
இன்றைய நச்:
உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள்;
உனக்குள் இருக்கும்
இந்தக் கடவுளை நீ வணங்கினால்
தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்!
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மனிதனின் மிக முக்கியமான பொறுப்புகள்!
இன்றைய நச்:
மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று;
ஒன்று - பகைவனை நண்பனாக ஆக்குதல்;
இரண்டு - கெட்டவனை நல்லவனாக மாற்றுதல்;
மூன்று - படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து
அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்!
– டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
ஒளி கொடுக்கும் விளக்காக இருப்போம்!
தாய் சிலேட்:
எரிகிற விளக்காக இரு;
அப்போதுதான்
பிறருக்கு
ஒளி கொடுக்கலாம்!
– தாகூர்