சென்னை மழையும் பொருத்தமான சிவாஜி பாடலும்!

அண்மையில் தமிழகம் கடும் வெயிலைச் சந்தித்து வந்த நிலையில், இடையில் திடீர் மழையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
 
புயல் குறித்த அறிவிப்புகள் வெவ்வேறு ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதோடு சமூக வலைத்தளங்களில் புயல் குறித்து சாம்பிராணி போட்ட மாதிரி பீதி எழுப்புவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ய ஆரம்பித்த நிலையில், ஏற்கனவே சென்னை நகரம் குண்டும் குழியுமாக காட்சிளிக்கும் சாலைகள் வெள்ளத்தினால் மேலும் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், நேரலை வானொலி ஒலிபரப்பில் நேயர் விருப்பம் என்கின்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
 
பல்வேறு நேயர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களைக் கேட்டு அதை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
 
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒருவர் விரும்பிக் கேட்ட பாடல் ‘தங்கப் பதக்கம்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாடலான “சோதனைமேல் சோதனை போதுமடா சாமி“ என்ற பாடலைக் கேட்டதும் உடனே வானொலியிலும் அந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
 
“சோதனைமேல் சோதனை போதுமடா சாமி,
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி“
 
சுற்றிலும் மழைக்கான சூழல் இருந்த நிலையில் எவ்வளவு ஈரப்பதமாக நொந்து போய் இப்படி ஒரு நேயர் விருப்பத்தை நிகழ்காலப் பொருத்தமாக அந்த நேயர் கேட்டிருக்கிறார் பாருங்கள்.
You might also like