சம்பாதிக்க அல்ல; சாகாமல் இருக்க எழுதுகிறேன்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் நெகிழ்ச்சி

ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

எழுத்தாளர் ஜெயகாந்தன் பதில் :

பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான கரியம் தான். ‘என்ன பிழைப்பு’ என்பது அலுப்புக் குரல்.

இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும்.

எழுத்தை வெறும் பிழைப்பாகக் கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை.

என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன்.

எழுத்துக்கு, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல: அது என் ஜீவன்.

– விகடன் பொக்கிஷம் நூலிலிருந்து

You might also like