உலகின் முதல் ஏர் ஹோஸ்டெஸ்!

விமானங்களில் பணிபுரிவதற்கு ‘ஏர் ஹோஸ்டெஸ்’ நியமிக்கப்பட்டது எப்போது தெரியுமா?

1930-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதிதான், முதன்முதலில் ‘ஏர் ஹோஸ்டெஸ்’ நியமிக்கப்பட்டது. முதல் ஹோஸ்டெஸ்ஸின் பெயர் மிஸ் எலன்சர்ச்.

ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து சிகாகோவுக்குப் போன விமானத்தில் பதினான்கு பிரயாணிகளுடன் அவர் போனார்.

விமானங்களில் இளம்பெண் தைரியமாகப் போவதைப் பார்த்தால், ஆகாய மூலம் பிரயாணம் செய்ய வயதானவர்களும் குழந்தைகளும் கூடத் தயங்காமல் வருவார்கள் என்று நினைத்துத்தான், இந்தப் பழக்கத்தைத் தொடங்கினார்கள்.

அப்போது அந்தப் பணிக்கு வரும் பெண்கள் இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். நர்ஸ் வேலை பழகி இருக்க வேண்டும்.

சம்பளம் நூறு மணி நேரப் பிரயாணத்துக்கு ஐந்நூறு ரூபாய்.

பச்சை நிறத்தில் தலையிலிருந்து கால் வரை முழுக்கோட்டு அணிந்துகொண்டு, தலையில் கிண்ணம் போன்ற குல்லாய் வைத்துக் கொள்வது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடை.

தகவல் : விகடன் பொக்கிஷம் நூலிலிருந்து…

You might also like