இளம் கவிஞர் கதிர்வேலுக்கு இன்னுமோர் மகுடம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் – ரமணி தம்பதியரின் மகன் கவிஞர் கதிர்வேல்.

இவர் த.வெ.க.வின் திருப்பத்தூர் மாவட்டக் கொள்கை பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.

2020 நிமிடத்தில் 2020 கவிதைகள் எழுதி உள்ளார்.

இதேபோல் தமிழக முதலமைச்சர் விஜய்யைப் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி சாதனை படைத்துள்ளார்.

தமிழக அரசின் தூயதமிழ் பற்றாளர் விருது, சர்வதேச தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

இதுபோன்ற பல்வேறு சாதனைகள் படைத்ததால், சென்னையில் நடைபெற்ற அறம் விருதுகள் விழாவில் 2026-ம் ஆண்டிற்கான சிறந்த கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதனை ‘அறம் செய்ய விரும்பு’ அறக்கட்டளை நிறுவனரும் திரைப்பட நகைச்சுவை நடிகருமான திரு.சதீஷ் வழங்கிப் பாராட்டினார்.

இதற்கான பாராட்டு விழா ஜடையனூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று கவிஞர் கதிர்வேலை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

You might also like