எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல்!

கண்ணதாசன் 100 :  பாடல் – 5

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான திருமதி வி.என்.ஜானகி தனது கணவரைப் பற்றி எழுதிய நூலில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றி கூறியுள்ளார்.

“என்னவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் பாடலான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தது.

பயணத்தின்போது அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் அவர்களால் மிகவும் ரசித்துப் பாரட்டப்பட்ட இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் 1960-ல் வெளிவந்த மன்னாதி மன்னன் படத்திற்காக எழுதினார்.

இந்தப் பாடல் திராவிட உணர்வை உயர்த்திப் பிடிக்கும் பாடல் என்பது மட்டுமல்ல, எப்போது கேட்டாலும் கேட்பவர் மனதில் உற்சாகத்தை ஊட்டும் பாடலாகவும் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், டி.எம்.சௌந்திரராஜன் மிக அழுத்தமான குரலில் பாடியிருக்கும் பாடல் காட்சியில், எம்.ஜி.ஆர். குதிரையில் பூட்டிய ரதத்தை ஓட்டியபடியே பாடுவதாக அமைந்திருக்கும்.

இந்தப் பாடலில் இடம்பெற்ற…

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர், மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்…

– என்ற இந்த வரிகளில் தான் எவ்வளவு அழுத்தமும் நம்பிக்கையும் தெரிகிறது பாருங்கள்.

இந்தப் பாடல் காட்சியில் நடித்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மட்டுமல்ல, மதிமுக பொதுச் செயலாளரான வைகோ போன்ற தலைவர்களுக்கும் மிகவும் பிடித்தமான பாடல் என்பது கூடுதல் சிறப்பு.

– தி. நன்மாறன், தஞ்சாவூர்

vels
You might also like