ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை!

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை. அர்த்தம் பொதிந்தவை. ஆழ்ந்து படிக்கும் போது வியப்பூட்டக் கூடியவை.

சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்:

‘கொக்கரிக்கும் ஒவ்வொரு கோழியும் ஒருகாலத்தில் முட்டையாக இருந்ததுதான்’

‘பொறுமை உள்ளவனால் கல்லைக் கூட சமைக்க முடியும்’

‘விழுந்த இடத்தைப் பார்க்காதீர்கள். வழுக்கிய இடத்தைப் பாருங்கள்’

‘வேகமாகப் போக வேண்டுமா? தனியாகப் போங்கள். வெகுதொலைவு போக வேண்டுமா? துணையோடு போங்கள்’

‘பூனை, மடாலயத்துக்குப் போனாலும் பூனைதான்’

‘சிங்கத்தைப் படைத்ததற்காக இயற்கையை ஏசாதீர்கள். சிறகு வைக்காததற்காக நன்றி சொல்லுங்கள்’

‘பறக்க விரும்பாத பறவை பட்டினியாய் தூங்கப் போகும்’

‘சிதறிய கிண்ணத்துக்கு சிந்திய தண்ணீர் பரவாயில்லை’

‘மெழுகை உருக்கும் சூரியன்தான் களிமண்ணை இறுக்குகிறது’

‘சிங்கமாக வேண்டும் என்று கனவு காணும் பூனை, எலி பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்’

‘தாயின் மார்புகளுடன் விளையாடும் குழந்தை, அதே உரிமையுடன் தந்தையின் விதைப்பைகளுடன் விளையாட முடியாது’

– மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like