தேர்தல் களத்தில் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆர். பாடல்கள்!

தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பிடித்தாலும், பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்பதுதான் சிறப்பு.

தமிழக பாஜக-வின் தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய போது, ‘நேற்று இன்று நாளை’ படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய “காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று” எனத் துவங்கும் பாடல் வரிகளில், “மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்வார், தம் மக்கள் ஒன்றைத்தான் மனதில் கொள்ளுவார்” என்கிற வரிகளை நினைவூட்டிப் பேசிய போது அதற்குப் பலத்த வரவேற்பு இருந்தது.

அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் திலகம் நடித்த ‘திருடாதே’ படத்தில் இடம்பெற்ற “திருடாதே பாப்பா திருடாதே” என்று தொடங்கும் பாடலில் வரும், “சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று… தவறாக இருந்தால்…” போன்ற வரிகளைத் தனது குரலில் பாடிக்காட்டிய போது அதற்கும் பலத்த வரவேற்பு இருந்தது.

தற்போது மக்கள் திலகம் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட, அவருடைய பாடல்கள் தேர்தல் களத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

You might also like