90 வயது வரை நடித்த சொக்கலிங்க பாகவதர்!

1995-ல் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘சதி லீலாவதி‘ படத்தில் ரமேஷ் அரவிந்த்தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் பழம்பெரும் நடிகர் சொக்கலிங்க பாகவதர். 

1921-ல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள் இவரைப் பற்றி அறிந்து இவரை ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி‘யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி சேரவும் வைத்தார்.

அப்போது ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம். ஐந்து ரூபாய் அப்போது பெரிய மதிப்பு மிக்கதாயிருந்தது.

முதன் முதலாக அக்காலத்திய ‘சம்பூர்ண மகாபாரதம்’ படத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வேடத்தில் நடித்துத் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

‘துக்காராம்‘, ‘ரம்பையின் காதல்‘, ‘வீடு‘, ‘சந்தியா ராகம்‘, ‘தையல்காரன்‘, ‘ஜெண்டில் மேன்‘, ‘அம்மா பொண்ணு‘, ‘இந்தியன்‘, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை‘, ‘ராமன் அப்துல்லா‘ போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.

1939–ம் ஆண்டிலேயே ‘ரம்பையின் காதல்’ அல்லது யத்ப விஷ்யன் என்ற படத்தில் நாரதராக நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்ற இவர், 1989-ல் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ படங்களில் நடித்த பிறகுதான் இக்காலத்து ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

‘குடும்பம்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கும் இவருக்கு தனது 90-ஆவது வயதில் தமிழக அரசால் ’கலைமாமணி விருது’ கிடைத்தது மகத்தான பரிசு.

இவருக்குக் கலைஞர் கருணாநிதியிடம் பொற் பதக்கமும், விருதும் வழங்கி, குடியிருக்க வீடும் கொடுத்து இவரை வாழ வைத்தார். சற்றுத் தாமதமாகக் கெளரவிக்கப்பட்ட நடிகர் கே.ஏ.சொக்கலிங்க பாகவதர்.

1934-ம் ஆண்டு ‘பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனி’யில் சீதா கல்யாணம் செட்டில் ஜனகனாகவும், தனிப்பாடல் ஆறு ரிக்கார்டும் பாடியதற்காக ரிக்காட்டிங் கம்பெனி இவருக்குப் பாகவதர் பட்டம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • நன்றி : அன்று கண்ட முகம் இதழ்
 
You might also like