தீபாவளியின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி!

தெற்கிலும் வடக்கிலும் அடுத்தடுத்த இரண்டு நாட்களாகக் கொண்டாடப்பட்டு வந்த தீபாவளியையொட்டி ஜவுளி, நகை, வணிகப் பொருட்கள், போக்குவரத்து உள்ளிட்ட சகலத்துக்கும் இந்திய அளவில் ஆன செலவு ரூ. 5 லட்சம் கோடி என்று மதிப்பிட்டிருக்கிறது இந்திய வியாபாரிகள் சங்கம்.

ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு மேல் வழக்கமாக ஆகும் வியாபாரம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்திருக்கிறது. அதிலும் தென்னக ரயில்வே இதுவரை இல்லாத அளவுக்கு வழக்கத்தைவிட 25 சதவீத பயணிகள் கூடியிருப்பதாக ஒரு தகவலை தெரிவித்திருக்கிறது.

சென்னை மாதிரி பெரு நகரங்களிலிருந்து தென் தமிழ்நாட்டுக்குப் போனவர்களும், வட நாட்டிலிருந்து வேலை நிமித்தம் தமிழ்நாட்டிற்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்களும் அவரவர் பகுதிகளுக்கு செல்வதற்கு மட்டுமே கூடுதலான தொகை செலவிடப்பட்டிருக்கிறது. 

எவ்வளவு காஸ்ட்லியாக குதூகலத்துடன் நம்மை கடந்து போயிருக்கிறது தீபாவளிக் கொண்டாட்டம்.

– மணி அமுதன்

You might also like