கார் பந்தயத்தில் தொடர்ந்து சாதிக்கும் அஜித்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் அவரது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்று வருகிறது.

இதில் அஜித் அணி துபாயில் 2ம் இடமும், இத்தாலியில் 3ம் இடமும், பெல்ஜியத்தில் 3ம் இடமும் பிடித்தது.

தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் அணி இந்த மாதமும் அடுத்த மாதமும் என மொத்தம் 4 போட்டிகளில் பங்கேற்கிறது.

ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நேற்று (செப்டம்பர் – 28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி 3ம் இடம் பிடித்துள்ளது.

‘அஜித்குமார் ரேஸிங்’ அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

You might also like