எம்ஜிஆர் மீது எல்லை இல்லா பாசம் கொண்ட ராணுவ வீரர்கள்!

இதயவீணை படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அப்போது ஒரு பாடல் காட்சிக்கு மலை உச்சி நோக்கி வாத்தியார் மற்றும் படக் குழுவினர் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது.
 
அந்த சாலை இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் இருக்க, ரோந்தில் இருந்த ராணுவவீரர்கள் வாத்தியார் குழு சென்ற வாகனங்களில் ஒன்று, சாலை ஓரத்தில் இருந்து கிடு கிடு பள்ளம் நோக்கி சிக்கி கொண்டது.
 
வாத்தியார் உட்பட உடன் நடிக்கும் குழுவினர் மற்றும் திகைத்து நிற்க, அப்போது அணி வகுத்து வந்த ராணுவ வாகனங்கள் சாலை ஓரம் நிற்கும் வாகனங்கள் பார்த்து திகைத்து நின்றது.
 
அந்த ராணுவ வீரர்களில் இருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர் அது எம்.ஜி.ஆர் சார் தானே என்று நொடியில் யோசித்து பிறரிடம் விவரங்கள் சொன்னதும், அடுத்த நொடிகளில் புயல் கால மீட்புப் பணி போல ஒரு பத்து நிமிடங்களில் இதயவீணை குழு வாகனம் அசால்ட்டாக சாலையில் தூக்கி நிறுத்தப்பட்டது. மஞ்சுளா, சி.ஐ.டி. சகுந்தலா மற்றும் துணை நடிகைகள் நிம்மதி மூச்சு விட்டார்கள்.
 
வாத்தியார் அருகில் வந்த ராணுவ வீரர்கள் எம்.ஜி.ஆர். சார் உங்களை பற்றிச் சொன்னார்கள். எங்க பெட்டாலியன் அதில் உள்ள தமிழக ராணுவ வீரர்கள்….
 
இப்போ போல அன்பேவா உங்கள் படம் எடுக்க சிம்லா வந்தபோது ராணுவ வீரர்கள் போரில் காயம் கொண்டு கை, கால்கள் இழந்த எங்கள் சகோதர்கள் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு வந்து பார்த்து, நீங்கள் கண்ணீர் மல்கி அவர்களை கட்டிப் பிடித்து அவர்கள் குடும்ப நல நிதிக்கு நல்ல தொகை கொடுத்த நிகழ்வை தமிழ் வீரர்கள் சொன்னபோது, உங்கள் மீது எல்லை இல்லா பாசம் உண்டானது.
 
“போங்க சார்.. மலை உச்சி நோக்கி” என்று வாழ்த்தி வணங்கி அனுப்பினார்கள்.
 
அதன்பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மேக்கப் உடன் மேலே போய் ஆடி பாடி நடித்தார்.
 
எல்லைக்கு காவல் நிற்கும் பிள்ளைகள்.. நம் அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்..
 
“காஷ்மீர் பியுட்டிப்புல் காஷ்மீர்” என்று….
 
பாடலில் இடம்பெற்ற அற்புத வரி…
 
“சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா.
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா”
 
– நெல்லை மணி.
 
 
You might also like