நூல் அறிமுகம்:
Arikawa ஜப்பானில் சமகால எழுத்தாளர்களில் ஒருவர். இவருடைய Traveling Cat Chronicles நூலுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவருடைய சில நாவல்கள் திரைப்படம் ஆகியிருக்கின்றன.
Allison ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பவர்களில் முக்கியமானவர்.
Pen America Awardஐ மொழிபெயர்ப்புக்காக வென்றவர். பத்திரிகையாசிரியர். மொழிபெயர்ப்புக்கான பல அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
ரெய்னீஸ் ஐயர் தெரு 1981ல் வெளியானது. ஒரு தெருவிலிருக்கும் மனிதர்களின் வாழ்க்கைச்சிதறல்கள் குறித்த நூலது.
வழக்கமான ஒன்று இரண்டு பிரதான கதாபாத்திரங்களின் பிரச்சனைகள், தீர்வுகள், சுபம் என்ற வரிசையிலில்லாது தெருவில் வாழும் மனிதர்கள் குறித்த Fragmentsகளின் பதிவு ரெய்னீஸ் ஐயர் தெரு.
இந்த நாவல் Hankyu Lineல் அமைந்திருக்கும் பல நிறுத்தங்களை நோக்கிப் பயணம் செய்யும் சில மனிதர்களின் சில வாழ்க்கைநிகழ்வுகள்.
இந்த இரயில் பயணத்தில் நண்பர்களால் கேலிசெய்யப்பட்டு ஒதுங்கியே இருக்கும் இளைஞன் அவனுக்கேற்ற பெண் துணையைக் கண்டுபிடிக்கிறான், பாட்டியும் பேத்தியும் ஒரு Bondingஐ உருவாக்குகிறார்கள்,
தன்னை ஏமாற்றித் தோழியை மணமுடித்த பழைய காதலனின் மணத்திற்குப் போய்வருகிறாள் ஒருத்தி, வன்முறை செய்யும் ஆண் நண்பனை விட்டு நிரந்தரமாகப் பிரிய முடிவுசெய்கிறாள் மற்றொருத்தி.
அறிந்தோ, அறியாமலோ இவர்களின் முடிவுக்கு உடன் பயணிப்போர் காரணமாகின்றனர்.
ஐந்து வருட உறவின் பின்னர் மணமுடிக்க ஆயத்தங்கள் செய்கையில் தோழி கர்ப்பமானதால் அவளை மணமுடிக்க வேண்டும் என்று சொல்பவனின் திருமணத்திற்கு மணப்பெண் போல் அலங்கரித்து, வெள்ளை ஆடையணிந்து அவர்கள் இருவரின் திருமணநாளை Spoil செய்பவள்,
அந்த அதிக விலை கொடுத்து வாங்கிய புத்தம்புதிய வெள்ளையாடை வேறு யாரும் அணிந்தால் வெறுப்பு அவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்று யாரும் பயன்படுத்த முடியாத வகையில் குப்பையில் எறிகிறாள்.
வஞ்சமும், கரிசனமும் ஒரே பெண்ணிடம். பெண்கள் வித்தியாசமானவர்கள்.
சாதாரணமனிதர்களின் சாதாரண கதைகளைக் கொண்டது இந்த நாவல். உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் மாறுகின்றன.
முதல் பயணத்தின் பின்னர் ஆறுமாதங்களில் அவர்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை நாவலின் இறுதிப்பகுதி சொல்கிறது. An easy read.
நன்றி: பேஸ்புக் பதிவு
நூல் அறிமுகம்: த பாசஞ்சர்ஸ் ஆன் த ஹன்க்யூ லைன்
ஆசிரியர்: ஹிரோ அரிக்காவா
தமிழில்: சரவணன் மாணிக்கவாசகம்
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 256