தேசிய விருதுகளைக் குவித்த தென்னிந்தியப் படங்கள்!

இந்திய சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய விருதுகள் நேற்று (ஆகஸ்ட்-1) அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இதில், நெகட்டிவ் ரோலில் மனித இயல்புகளையும் வன்மம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை பிரதிபலித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை பாலகிருஷ்ணாவின் ‘Bhagavanth Kesari’ திரைப்படம் வென்றிருக்கிறது. இந்தப் படம் தான் ‘ஜன நாயகன்’ ரீமேக் என கூறப்பட்டு வந்த நிலையில் அதிலிருந்து ஒரு காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

அதே போல, உள்ளொழுக்கு எனும் மலையாள படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஊர்வசி – பார்வதி இருவரும் இணைந்து நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். இறப்பை மையமாக வைத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

இதற்கு முன்பு ‘அச்சுவின்டே அம்மா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை முதல் முறை பெற்றார். இருபது வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ படப் பாடலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லிட்டில் விங்ஸ்’ ஆவணப்படத்துக்காக சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் தெலுங்கில் வெளியான ‘பேபி’ பட எழுத்தாளர் சாய் ராஜேஷ் நீலம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிர்கருக்கான விருது ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் மற்றும் ‘12த் பெயில்’ பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோருக்கு பகிர்ந்தளிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இந்திப் படமாக ‘12த் ஃபெயில்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உண்மை கதையை அடிப்பைடயாக கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
 

‘KATHAL’ படத்துக்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடியான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி ’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் இயக்குநர் Sudipto Sen-க்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
‘சாட்டர்ஜி vs நார்வே’ இந்திப் படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விருது  அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கும் படக்குழுவினருக்கும் அதில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
You might also like