சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!

இலங்கை மே தினத்தின் சூளுரை

“தெற்கு ஆசியாவில் இலங்கை மிக முக்கியமான நாடு. எல்லாவித இயற்கை வளங்களும் அமைந்த நாடு. நிலப் பிரபுத்துவம், முதலாளித்துவம் சுரண்டலால் மக்கள் உடமைகளை இழந்து ஒடுக்கப்பட்டார்கள்.

தங்களது சுரண்டலை மறைக்க தமிழ், சிங்களம், முஸ்லிம் என பிரிக்கப்பட்டு பேரினவாதத்தை பயன்படுத்தி இதற்கு மக்கள் பலியானார்கள்.

இதற்கு எதிராக இலங்கை வரலாற்றில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை இன, மொழி, பாகுபாடுகளை கடந்து உழைக்கும் வர்க்கமாக மக்கள் அணி திரண்டு முதல்முறையாக இடதுசாரி அரசை நிறுவியுள்ளனர்.

தோழர் அனுரா குமார் திஸ்ச நாயக்கா தலைமை வகிக்கிறார். இவர்கள் நடத்திய தேசிய மக்கள் சக்தி மே தினத்தில் செங்கடல் என மக்கள் அணி திரண்டனர்.

இதில் தோழர் அனுரா குமார் திஸ்ச நாயக்கா மற்றும் தோழர்கள் ஆற்றிய உரை உழைக்கும் வர்க்கத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.

நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக நம்மைவிட நாட்டு மக்கள் முன்னோக்கி நகர்கின்றார்கள். அது கடந்த பொதுத் தேர்தலில் நன்கு தெரிவுபடுத்தப்பட்டது.

வடக்கு மக்கள் மற்றும் கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது அதிக நம்பிக்கை வைத்தனர். அவர்கள் நம்மை விட முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார்கள்.

நாம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலேயே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டோம். எமது தொடர்பாட்டில் பிரதான சிங்கள மொழியிலேயே இருக்கின்றது.

நாம் தமிழ்மொழியில் தொடர்பாடிலே மிகக் குறைந்த மட்டத்திலேயே பேணுகின்றோம். எனினும் அந்தப் பகுதி மக்கள் வடக்கின் பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாரம்பரிய அரசியல் தலைவர்களை அவர்கள் தெரிவு செய்யவில்லை. அவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு நம் மீது அந்த மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதன் மூலம் என்ன புலப்படுகின்றது? தேசிய ஐக்கியம் தேவை என்று இந்த மக்கள் கூறுகின்றார்கள்.

நாம் அந்த மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை. அவர்களின் உரிமைகள் அவர்களுடைய கலாச்சார உரிமைகள், அவர்களின் மொழி சார்ந்த உரிமைகள், அவர்களுடைய பாரம்பரிய உரிமைகள்,

அவர்களின் பாரம்பரிய நிலம் தொடர்பான உரிமை, சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை, அந்த நாட்டில் குடிமக்களாக வாழ்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற அனைத்து அடிப்படை உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்துவோம்.

அதுவே நமது நாட்டை கட்டி எழுப்பும் இரண்டாவது தூண். அது இல்லாமல் நமது நாட்டை கட்டி எழுப்புவது தொடர்பில் நம்மால் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது.

மக்களை பிளவுபடுத்தும் அரசியலை அன்று காணப்பட்டது. எனினும், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களை ஒன்றிணைக்கும் அரசியல் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மக்கள் மற்றும் கிழக்கு மக்கள் தெற்கு மக்கள் ஒரே கருத்தில் ஒரே இயக்கத்தில் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

அது மிகவும் தேவையான ஒரு அடித்தளமாகவும் அந்த அடித்தளத்தை நாம் தற்போது உருவாக்கியுள்ளோம்.

மறுபுற அரசியலில் இன்று என்ன நடக்கின்றது, தங்களுக்கான சலுகைகள் கிடைக்காததால் தற்போது அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அத்துடன் பல விஷயங்களில் அவர்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

தற்போது அவர்கள் பல விதங்களில் வெற்றுப் பேச்சுக்களை பேசுகின்றனர்.

மார்ச் மாதம் அரசாங்கம் கவுந்து விடும் என்று கூறினார்கள், மார்ச் முடிவடைந்த உடன் ஆகஸ்ட் மாதம் என்று கூறுகிறார்கள், மற்றும் ஒருவர் டிசம்பர் மாதம் என்று கூறுகிறார்.

இவையெல்லாம் வெற்றுப் பேச்சுக்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டை கட்டி எழுப்புவதற்கான குறுகிய பாதைகள் இல்லை.

இது நாங்கள் திட்டமிட்டு மேற்கொள்கின்ற ஒரு சிறந்த பயணமாகும்.

நாம் ஒரு சிறந்த அடித்தளத்தை இடவேண்டும். அடித்தளம் இல்லாத ஒரு நாட்டையே இங்கு உருவாக்கி, செல்லும் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு கப்பலை போன்ற நாட்டையே என்னிடம் அவர்கள் ஒப்படைத்தார்கள்.

எனக்கு கிடைத்த இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டில் ஒரு சிறந்த அடித்தளத்தை எடுத்து, அதற்கான பல முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம் எமது தரப்பிலிருந்து எம்மால் முடிந்தவரை அனைத்து முயற்சிகளையும் நாம் எடுத்துள்ளோம்.

இந்த அஸ்திவாரத்தில் பிரதான தூண் என்ன?? ஊழல் அரசியலை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இது இல்லாமல் நாட்டை கட்டி எழுப்ப முடியாது.

நீங்கள் எதிர் கொள்கின்ற பிரச்சனைகள் எமக்கு தெரியும். அது தெரியாமல் இருந்திருந்தால், நாங்கள் உங்களது அடிப்படை சம்பளத்தை அதிகரித்திருக்க மாட்டோம். உங்களது எந்தவித கோரிக்கைகளும் இன்றி சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.

தவறான விஷயங்களுக்காக போராட வேண்டாம். அது நியாயமானது அல்ல. இன்று நாட்டை கட்டி எழுப்பும் ஒரு இயக்கமே ஆட்சி பீடம் என்றாகியுள்ளது. ஆகவே, பழைய உடைகளை கலைந்து புதிய உடைகளை அணிந்து கொள்ளும் காலம் ஏற்பட்டுள்ளது.

இன்று நமது அரசு சேவையை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. நமது நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் பலமான ஒரு அரசு தேவைப்படுகின்றது.

அதைத் தொடர்பில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க போராட்டங்களில் இதயத்துடிப்பை அறிந்த ஒரு இயக்கமே தற்போது நாட்டில் ஆட்சி பீடமாக இயங்குகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுடைய அபிலாசைகளுக்காகவும் சுவரொட்டிகளை ஒட்டிய இயக்கமே இன்றைய இயக்கம். உங்களது உரிமைகளுக்காக போராடிய ஒரு இயக்கமே எனது இயக்கம்.

எனவே, எனக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித பிரச்சனையும் இருக்க முடியாது. நாம் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் ஒன்றிணைந்து திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக அணித்திரளுமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

நான் பொறுப்புடன் இதனை கூறுகின்றேன்.

வெளியில் வெற்றுப் பேச்சுக்களை பேசுபவர்களும் இருக்கின்றனர். அரசியல் எம்மிடமே இருக்கின்றது. சவால்களும் எம்மிடமே இருக்கின்றது.

லட்சக்கணக்கான கிராம மக்கள் இங்கே ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். நீங்கள் காளி முகத்திடலில் வந்தால் கிராமத்தை கைப்பற்றி விடுவதாக கூறியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் வெற்றி பேச்சு அல்லவா!! அவர்களுடைய அரசியல் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது எவ்வித இடமும் இல்லை. அவர்கள் அத்துடன் மிகுந்த அச்சம் அடைந்துள்ளார்கள். சில வேலை வலது கையில் எழுதுவதை வாயால் பேசுவதில்லை, ஒரு மேடையில் கூறுவதை மற்றொரு மேடையில் கூறுவதில்லை.

இவ்வாறு பல சிக்கல்களை அவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றார்கள் எனவே சவாலானது வெளியில் முடிவடைந்துள்ளது.

ஆனால் சவால் எங்கே இருக்கிறது? தற்போது இங்குதான் சவால் இருக்கின்றது.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் மக்களை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த நாட்டை ஒரு சிறந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். அந்தப் பயணத்தை நாம் தற்போது ஆரம்பித்து இருக்கின்றோம். இந்த பயணத்தில் நாம் வெற்றிகாண வேண்டும் என்பதற்காக

இந்த நாட்டுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்காக நம் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த நாடாக நாம் மாற்ற வேண்டும், அந்தப் பயணத்தை நாம் தற்போது ஆரம்பித்திருக்கின்றோம்.

இதில் வெற்றி பெறுவதற்காக சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பதற்காக நாம் ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றோம். எனவே இன்று காலி முகத்திடலில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெளிப்படுத்துகிறீர்கள்.

இந்த சவாலுக்கு நாங்கள் தயார் என்று செய்தியை நீங்கள் கூறுகின்றீர்கள். இந்த நாட்டை ஆள்வதற்கு தயார் என்ற விஷயத்தை நீங்கள் கூறுகின்றீர்கள்.

மக்கள் சக்தி அதற்கான நம்பிக்கையான இயக்கம் என்பதனை நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள். நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையப் போகின்றது என்ற செய்தியை நீங்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

இந்த செய்தியையே நாங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் கூறுகின்றோம். அதேபோன்று வெற்றுப் பேச்சை கூறுகிறவர்களுக்கும் இந்த செய்தியை சொல்கின்றோம்.

நாம் புதியதொரு அஸ்திவாரத்தையும் ஆரம்பிக்க வேண்டும் அந்த அஸ்திவாரத்தை நாம் ஆறாம் தேதி (மாகாண சபைத் தேர்தலில்) ஆரம்பிக்க முடியும்.

ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் இவை அனைத்தும் நமது கையில் இருக்கின்ற பொழுது அனைத்து அதிகாரமும் ஒரு இடத்திலே இருக்கும்.

எனவே ஊர் சபைகள் நகர சபைகளை தேசிய மக்கள் இயக்கத்தின் கையில் கொடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிரானது.

மக்கள் சபைகளும் திருடாத குடிமகன் சபைகளாகவே இருக்க வேண்டும்” என இலங்கை ஜனாதிபதி மிகச்சிறந்த உரையை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சந்திர சேகர் பேசும்போது:-

“இன்று மக்களுக்கு இருக்கின்ற கனவு, நாட்டில் இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்றவர்களுக்கு இருக்கின்ற கனவு, நாங்கள் கண்ட கனவு போன்ற எல்லா கனவுகளும் இன்றைக்கு நனவாகி புது யுகம் ஒன்று உருவாகியுள்ளது.

உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.

அந்த குறிக்கோளை அடைவதற்கு நாங்கள் பயணத்தை முன்னெடுக்கின்ற பொழுது இன்னமும் கூட ஒரு சில கயவர்கள் ஒரு சில தீயவர்கள் தங்களுடைய தீய செயல்களை தங்களுடைய பழைய நோக்கங்களுக்காக, மக்களை பிரிப்பதற்கான செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

தமிழ் மக்கள் என்றும் சிங்கள மக்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருந்தோம் சிதைக்கப்பட்டு இருந்தோமே தவிர எங்களை ஒரு தாய் மக்களாக எங்களை இலங்கையனாக கட்டி எழுப்புவதற்காக, இது நாள் வரைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் உருவாகவில்லை.

ஆனால் எங்களுடைய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பிறகு 200 வருடங்களுக்குப் பிறகு தோட்டத்து தொழிலாளர்களுடைய முகங்களின் மகிழ்ச்சி, தொட்ட தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் மாற்றம், அவருடைய வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படுவதாக இருந்தால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழே ஆகும்.

அதனால், அந்த அரசாங்கத்தினுடைய வெற்றி என்பது இனி யாராலும் எவராலும் அசைக்க முடியாத வெற்றி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.” 

இந்த மே தின கூட்டத்தின் சிறப்பு இந்தியாவில் இருந்து CITU தேசிய செயலாளரும் CPIM மத்திய குழு உறுப்பினருமான தோழர் ஏ.ஆர். சிந்து கலந்து கொண்டு மிகச்சிறப்பான உறையும், உலக மக்களுக்கும் அறை கூவல் விடுத்தார்.

உலக முதலாளித்துவம் தோற்றுப் போய்விட்டது. அது தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி பல நாடுகளை சீரழித்து வருகின்றது.

பாலஸ்தீனம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை கண்டித்ததோடு, கம்னிச நாடான கீபாலின் பொருளாதாரக் கொள்கை சிறப்பானதாகும். இதை காப்பாற்றுவது முக்கியம்.

உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள் ஒருங்கிணைய அழைப்பு விடுத்தார்.

கார்ப்பரேட் மயம், தனியார் மயம், தாராளமயம் ஒழிக்கப்பட வேண்டும் என முழங்கி தோழர் அனுரா குமார் திஸ்ச நாயக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தார்.

– M.S. செல்வராஜ்

You might also like