செய்தி:
கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
மேலே குறிப்பிட்ட சாதியம் சார்ந்த ஆணவப் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு போய், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேமாதிரி ஆணவப் படுகொலைக்கு காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்படுமானால், அதுவே இத்தகைய ஆணவப் படுகொலைகள் நிகழ்வதற்கு மறைமுகமான ஊக்குவிப்பு ஆகிவிடாதா?