ஷார்ஜாவில் புதிய தாவர இனங்கள் கண்டுபிடிப்பு!

புதிதாகக் கண்டயறிப்பட்ட இந்த தாவர இனங்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன.

பாலைவன சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளன.

ஷார்ஜா விதை வங்கி – ஹெர்பேரியத்தின் கள ஆராய்ச்சியாளர்கள் குழுவால் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட மூன்று தாவர இனங்களை வெற்றிகரமாக கண்டுபிடித்ததாக ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.

ஷார்ஜாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் புதிதாக பதிவு செய்யப்பட்ட இனங்களில் ஒன்றான டாக்டிலோக்டீனியம் ஆஸ்ட்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்தின் வனத் தாவரங்களில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.

ஷார்ஜாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆணையத் தலைவர் ஹனா சைஃப் அல் சுவைதி, “ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக மூன்று புதிய பதிவு செய்யப்பட்ட தாவர இனங்களைக் கண்டுபிடித்தது உற்சாகம் அளிக்கிறது. இது அறிவியல் ஆய்வு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த கண்டுபிடிப்பு மேம்பட்ட மற்றும் புதுமையான ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்திய அறிவியல் ஆய்வின் பலன்” என்றார்.

காட்டுயிர்கள் மற்றும் விதை மாதிரிகளை ஆராய்வதற்கும், சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் ஆய்வுக் குழுவினர் பல பயணங்களைச் செய்கிறார்கள்.

இது பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் செய்யப்படும் முயற்சிகளை வலுப்படுத்துகின்றன.

புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த காட்டுயிர்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன.

அவை எதிர்கால அறிவியல் ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறக்கின்றன என்பதையும் அல் சுவைதி சுட்டிக்காட்டினார்.

ஷார்ஜா விதை வங்கி மற்றும் ஹெர்பேரியம் குழுவின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

“உள்ளூர்ச் சூழலை ஆராய்வதற்கான அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், பூர்வீக தாவர இனங்கள் பற்றிய நமது அறிவியல் அறிவை விரிவுபடுத்துகின்றன.

அத்துடன் உள்ளூர் மற்றும் சர்வதேச நிலைகளில் ஆய்வுக்கான ஒத்துழைப்பையும் மேம்படுத்துகின்றன.

அல் தைத் நகரில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷார்ஜா விதை வங்கி மற்றும் ஹெர்பேரியம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அரியவகை வன மற்றும் பாலைவன தாவர இனங்களைப் பாதுகாப்பதற்கான முன்னோடி முயற்சி.

You might also like