ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.
அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக மாற்றிக்கொள்வது உங்கள் விருப்பம் மற்றும் உரிமை என நினைக்கலாம்.
சரியே, ஒரே பிரச்சனை என்னவெனில் நீங்கள் சமர்பிக்கும் புகைப்படங்கள் ஏஐ நுட்பத்திற்கான பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ளப்படும் என்பது தான்.
எப்படி, எவ்வாறு பயன்படுத்தப்படும் எனும் நிச்சயம் இல்லாத போது நீங்களாக ஏன் முன்னின்று ஏஐ நிறுவனங்களுக்கான பயிற்சி தரவுகளை விரும்பி அளிக்கிறீர்கள்?
நன்றி: முகநூல் பதிவு