நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமல்ல கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.
அதன்பிறகு, போர்த்துக்கல் போட்டியிலும் பங்கேற்ற அஜித் அணி, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது.
இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அஜித் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்தியக் கொடியுடன் சென்றது இந்தியர்களைப் பெருமைப்பட வைத்தது. இதனிடையே, வெற்றிபெற்ற அஜித்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.