தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம். தஞ்சை பெரிய கோயில் அப்பொழுது எங்களுக்கு விடுமுறை நாட்களில் ஓடி விளையாடும் இடமாக இருந்தது. அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டன.
நாங்கள் விளையாடிய கரூர் தேவருடைய இடத்தைச் சென்று பார்த்தோம். இன்றைய மனநிலையில் அதன் வரலாறு என்னை மிகவும் வசீகரிக்க வைத்தது.
தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தைப் போலவே, பேரழகு கொண்டது முருகன் கோயில்.
அதில் கல் உளியால் ஊசி நுழையக்கூடிய அளவிற்கு எப்படி வேலைப்பாடுகளை அமைத்தார்கள் என்பது வியப்பிற்குரியது. அன்று நான் பார்த்த யானையின் தந்தம் ஒன்று முருகன் கோயிலில் உடைந்திருந்தது எனக்கு இது வருத்தத்தை அளித்தது.
எப்படியோ, 60 ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் பருவத்தில் பார்த்ததை மீண்டும் பார்க்கிறேன். இந்த நாள் எங்களின் இனிய நாள்.
நன்றி: முகநூல் குறிப்புகள்