கான்பூருக்கு அருகிலுள்ள சேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் நிஷாத், 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பூக்கள் விவசாயத்தைத் தொடங்கினார்.
ரோஜா, சாமந்தி, துளசி, மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற உள்ளூர் பூக்களை பயிரிட்டார்.
தனது முயற்சியை சோலார் ட்ரையர்களைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்கு 15 வகையான உலர்ந்த பூக்களை வழங்கினார்.
நீரிழப்பு பூக்களுக்கான வளர்ந்துவரும் சந்தையால் உற்சாகம் பெற்ற 32 வயதான சிவராஜ், லக்னோவின் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரி.
“நான் அப்போது மாதம் 21 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அலுவல் காரணமாக அடிக்கடி பயணம் செய்வதால், பல நாட்கள் வீட்டிலேயே இருக்கமுடியாது. எனவே விவசாயத்தில் ஈடுபட முடிவெடுத்தேன்.
குடும்பத்துக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய பயிர்களைப் பயிரிடவில்லை. இங்கு நன்றாக வளரும் பட்டாணியை வளர்க்கத் தேர்ந்தெடுத்தேன்.
பாரம்பரிய பயிர்களை வளர்ப்பதன் மூலம் வருமானம் குறைவாக இருந்தது. மேலும் செலவுகள் அதிகமாக இருந்தன” என்று பேசத் தொடங்குகிறார் சிவராஜ்.
முதல்கட்டமாக அவர், தனது முயற்சியை வெறும் 10 கிலோ நீரிழப்புப் பூக்களுடன் தொடங்கினார். இப்போது ஆண்டுதோறும் 20 முதல் 30 டன்கள் வரை விற்பனை செய்கிறார்.
அவை பெரும்பாலும் ஷேக்பூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் இருந்து பெறப்படுகின்றன. இந்த கிராம மக்கள் வழக்கமாக நெல், கோதுமை, பயறு போன்ற பயிர்களை மட்டும் பயிரிட்டு வந்தனர்.
முன்பெல்லாம் ப்ரெஷ்ஷான புதிய பூக்கள் விற்பனையில் போதிய லாபம் கிடைக்கவில்லை. பல நாட்கள் விற்பனை நடக்காமல் ஆற்றில் கொட்டப்பட்டு வந்தன. இந்த பூக்களை வளர்த்து தன்னிடம் விற்குமாறு விவசாயிகளிடம் தெரிவித்தார் சிவராஜ்.
பின்னர், அவர்கள் மலர் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்கள். ஏழு வகையான பூக்களை அவர்கள் பயிரிடுகிறார்கள். அத்தனை பூக்களையும் அவர் வாங்கிக்கொள்கிறார்.
விவசாயிகளுக்கு உடனடியாக அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனால் வெகுதூரம் சென்று சந்தையில் விற்கவேண்டிய தேவையும் மெல்ல குறைந்தது.
தொடக்கத்தில் சிவராஜ், பட்டாம்பூச்சி பட்டாணியை பயிரிட்டார். பிறகு ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, லெமன்கிராஸ், ஸ்பியர்மிண்ட், துளசி, மல்லிகை, கெமோமில் மற்றும் இஞ்சி ஆகியவற்றை பயிரிட்டார்.
இவை அனைத்தும் தேநீர், சிரப் அல்லது பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். ஆண்டுக்கு 20 முதல் 30 டன்கள் வரை விற்பனை செய்யும் அவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
கிராமத்திற்கு வெளியே ஒரு சிறு வணிக மையத்தை நிறுவியுள்ளார். அந்த இடத்திற்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளில் வரும் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட மலர்களை விற்கிறார்கள். அந்த மலர்கள் 15 மணி நேரம் வரையில் கெடாமல் இருக்கின்றன.
சோலார் ட்ரையர்களின் பயன்பாடு அவரது வியாபாரத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறயது. திறந்த சூழலில் பூக்களை உலர்த்தியதால் ஆரம்பத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.
“எங்களுடைய மலர் விற்பனையில் சோலார் ட்ரையர்கள் ஒரு கேம் சேஞ்சராக மாறிவிட்டன” என்று உற்சாகமாகப் பேசுகிறார் வெற்றிபெற்ற விவசாயியாக சிவராஜ்.