மீண்டும் மீண்டும் கைதாகும் தமிழக மீனவர்கள்!

செய்தி:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி, தொடரும் இந்த தாக்குதலைத் தடுக்க வலியுறுத்தி ஓய்ந்து போய்விட்டார்கள். அந்த அளவுக்கு இலங்கை அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

அண்மையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களை விடுவிக்கக் கோருவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மீனவர்களுக்குத்தான் விடிவு காலம் இல்லை.

You might also like