நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியுமா?

செய்தி:

சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்நிலைகளாக இருந்தாலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவிந்த் கமெண்ட்:

சராசரியான பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தால் அவற்றை புல்டோசர்கள் வைத்து பயமுறுத்தி எப்படியோ அகற்றி விடுகிறார்கள்.

ஆனால், தமிழகம் முழுக்க பல்வேறு நீர்நிலைகளில் மத்திய அரசின் கட்டிடங்கள், மாநில அரசின் கட்டிடங்கள், குறிப்பாக காவல் நிலையங்களே கட்டப்பட்டிருக்கின்றன. கூடவே நீதித்துறை சார்ந்த கட்டிடங்களே கட்டப்பட்டிருக்கின்றன.

சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று கருத்து சொல்லியிருக்கிற சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் தரப்பிலேயே நடந்திருக்கிற அதிகாரபூர்வமான அத்துமீறல்கள் குறித்து என்ன முடிவு செய்யும்?

You might also like