ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணக் கொள்ளை!

செய்தி:

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

சும்மாவே அதிகக் கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விழாக் காலங்களில் பேருந்துக் கட்டணத்தை இஷ்டத்திற்கு இரண்டு மடங்குக்குமேல் உயர்த்தி பயணிகளைப் பரிதவிக்க விடுவது வழக்கமாக எந்த ஆட்சி நடந்தாலும் நடக்கக்கூடிய ஒன்றாகவே மாறிப் போயிருக்கிறது.

இப்போது, தீபாவளி நெருங்கும்போதும் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் வழக்கம்போல உயர்த்தப்படும். அதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் வழக்கம்போல் பட்டும்படாமலும் அறிக்கை மட்டும் கொடுப்பார்கள்.

வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களும் வழக்கம்போல பயணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

எதையெதையெல்லாம் தமிழகச் சூழலில் வழக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

You might also like