பண்பாளர், மனித நேயர், இவர் இவ்வளவு பெரிய செல்வந்தர் என்பதைவிட இவரது பண்பியல்பே பெருவியப்பில் ஆழ்த்தும் தரச்சான்று.
செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி ‘ரகம்’!
யார் வேண்டுமானாலும் பெரும் செல்வந்தர் பட்டியலில் இடம் பெறலாம்; மேலும் மேலும் புள்ளி விவரங்களுடன் போட்டி போடலாம்.
ஆனால், எப்போதோ ஒருமுறை தான் ரத்தன் டாட்டா போன்றவர்கள் பிறந்து வாழ்கிறார்கள்; மறைகிறார்கள்.
ஆலயம் கட்டுவதில்லை அறம்; கல்விச்சாலைகளும் புற்றுநோய் மருத்துவமனைகளும்தான் பேரறம் என்பதை அறிந்த தெளிவான மனமுடையவர்.
மன்னா உலகில் மன்னுதல் குறித்ததோர் தன்புகழ் நிறுவி தாம் மாய்ந்தனரே என்பது சங்க இலக்கியம்.
நன்றி: பேஸ்புக் பதிவு