ரஜினி சொன்ன ‘ஐடியா’ ஏற்றுக்கொண்ட அனிருத்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ படத்தைத் தொடர்ந்து நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. ‘லால் சலாம்’ படத்தைத் தயாரித்த ‘லைகா’ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

‘ஜெய்பீம்’ புகழ் டி.ஜே. ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் இந்தி ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ம் தேதி வேட்டையன் வெளியாக உள்ளது.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு தமிழின் ‘மோஸ்ட் வாண்டட்’ இசை அமைப்பாளரான அனிருத், ‘வேட்டையன்’ படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ படம் குறித்து அனிருத் மனம் திறந்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘ஜெய்பீம்’ படம் எனக்கு  ரொம்பவே பிடித்த படம். ஞானவேல் சார் ‘வேட்டையன்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, ரஜினி சார் இப்படியொரு வித்தியாசமான கதையில் நடிப்பது புதுமையாக இருந்தது’ என குறிப்பிட்டார்.

‘’இது, ஒரு வலுவான கதை – மக்களுக்கு மிகவும் பிடிக்கும் – நல்ல படம் என்று பெயர் வாங்கும் – ‘வேட்டையன்‘ மீது எனக்கு 100 % நம்பிக்கை  உள்ளது.

ரஜினி சார் இந்த மாதிரியான கதையில் நடிப்பதால் இந்தக் கதையின் ‘ரீச்’ வேறு மாதிரி இருக்கும் – ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ‘வேட்டையன்’ வித்தியாசமான படம் – ஒரு பிரச்சினையை மையப்படுத்திய படம் – கதைக்களமே வித்தியாசமானது – ரஜினி சாருக்கும், எனக்கும்  ‘வேட்டையன்’ ரொம்பவே புதிதான களம்’ என சிலாகித்த அனிருத், இன்னொரு தகவலையும் வெளியிட்டார்.

‘மனசிலாயோ’ வார்த்தை ஏற்கெனவே பிரபலம் –  பாடல் ரொம்ப கருத்தாக இல்லாமல், சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லலாம் என்று வைத்துள்ளோம் – இந்தப் பாடலின் படப்பிடிப்பு என்னுடைய வாய்ஸில்தான் நடந்தது

அப்போது கேரவேனில் ரஜினி சாருடன் பேசிக் கொண்டிருந்தேன் – அவர் தான் மலேசிய வாசுதேவன் குரலில் இந்தப் பாடல் இருந்தால் எப்படியிருக்கும் என என்னிடம்  கேட்டார் – ரஜினி சாரும், வாசுதேவன் சாரும்  இணைந்து நிறைய ‘ஹிட்’ பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள்.

ரஜினி சார் சொன்னது அற்புதமான ஐடியாவாக இருந்தது. மலேசியா வாசுதேவன் குரலில் அவரது மகன் யுகேந்திரன் தான் பாடிக் கொடுத்தார் – 80-களில் உள்ள குரல் இருந்தால் எப்படியிருக்கும் என எண்ணினேன் – அதைத்தான் செயற்கைத் தொழில் நுட்பம் (ஏஐ) மூலமாக உருவாக்கினோம்’’ என ரகசியம் உடைத்தார் அனிருத்.

இதனிடையே ‘வேட்டையன் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பாப்பாங்குளம் பாரதி.

#இளையராஜா #ஏ_ஆர்_ரஹ்மான் #அமிதாப்_பச்சன் #ராணா #ஃபகத்_பாசில் #மஞ்சு_வாரியர் #துஷாரா_விஜயன் #ரித்திகா_சிங் #டி_ஜே_ஞானவேல் #அனிருத் #மலேசிய_வாசுதேவன் #ilayaraja #a_r_rahman #amithap_pachan #raana #thusara_vijayan #t_j_gnanavel #aniruth #malasia_vasudevan #yugendren #யுகேந்திரன்

You might also like