ஈரோடுக்கு அருகில் இருக்கும் கிராமதேவதை வானத்திலிருந்து குதித்த புராண கதாபாத்திரம் அல்ல. எல்மோர் (1984) எனும் மக்கள் பண்பாட்டு அறிஞர் இந்த கிராம தேவதைகளில் பல பெரும்பாலும் அவ்வூரில் வாழ்ந்தவர்களின் ஆவியாகும் எனக்குறிப்பிடுகிறார். இது தமிழர்களின் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சிதான்.
டாக்டர் ஆ.சிவசுப்பிரமணியன் களஆய்வின்படி இவை பெரும்பாலும் கொலையில் உதித்த தெய்வங்கள். நில உடைமைக் கொடுமை, பாலியல் வன்முறை, சாதி மீறிய காதல், கொள்ளையர், காமுகர் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும்போது கொலை செய்யப்பட்டவர்கள் தெய்வங்களாகி விடுகிறார்கள்.
இவர்கள் இன்னும் ஆவியாக வாழந்து தங்களைக் காப்பதாக நம்பும் தொன்மம் தமிழகத்தில் உண்டு. நாளடைவில் இவர்களைப் புனிதப்படுத்தி இந்து மதத்தின் பெருந்தெய்வங்களுடன் இணைத்து விடும்போக்கு உள்ளது. இது தவறானதாகும்.
இப்படி புனிதப்படுத்துவதால் விளிம்புநிலை மக்களின் வீரர்களை மக்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களாக உயர்த்தி விடுகிறார்கள். உண்மையில் பெருமதங்களுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.
ஆனால் இந்துமதம் இவர்களை பெருமதங்களுடன் தொடர்புப்படுத்தி விடுகிறது. இது முன்னோர்களை வழிபடும் ஆதிவாசி பண்பாட்டின் தொடர்ச்சியான ஒரு தமிழ்ப் பண்பாட்டை நாசம் செய்யும் ஒரு முயற்சி என்று நாம் உணரவேண்டும்.
நன்றி: முகநூல் பதிவு