நளினி எப்போதும் சிரிக்க வைப்பார்: எழுத்தாளர் தீபா!

நானும், நளினி அவர்களும் ஒரே ஃபிட்னெஸ் வகுப்புக்கு செல்கிறோம். ‘ரைட்டர்’ என்று தெரிந்ததும் உற்சாகமாகப் பேசினார். அதில் இருந்து அவருக்கு நான் ‘தீபாம்மா’.. அபூர்வமாகப் பேசுவதற்கு சமயம் கிடைக்கும். சினிமா குறித்து உரையாடுவோம். அவர் கடந்து வந்த சிலவற்றைச் சொல்வார்.

எங்கும் சுயபச்சாதாபமோ குற்றச்சாட்டோ இருக்காது. புன்னகையுடன் கடந்த கால அவலங்களைச் சொல்ல கடின பாதை அவருக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

“உங்க கூட வொர்க் அவுட் பண்ணா சிரிச்சிட்டே இருக்கேன். நான் அந்தப் பக்கம் போறேன்” என்று சொல்லியிருக்கிறேன். எதையாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

விகடனில் ‘திரையெல்லாம் செண்பகப்பூ’ தொடரினைத் தொடர்ந்து படிக்கிறார். அவருக்குப் பிடித்திருந்ததாய் சொன்னார். மட்டுமல்லாமல் வகுப்புக்கு வரும்‌ மற்றவர்களிடமும் படிக்கும்படி சொல்லிக் கொண்டிருப்பார். அருமையான மனுஷி அவர்.

இதே கிண்டலும் கேலியும் புத்தக வாசிப்பும் சிரிப்பும் உற்சாகமுமாய் அவர் இருக்க வேண்டுமாய் நினைத்துக் கொள்வேன். அவரால் அப்படித்தான் இருக்கமுடியும். அது அவர் எடுத்துக்கொண்ட தீர்மானம்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like