உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?

வாசிப்பின் ருசி:

சுவைக்கும் ருசிக்காக
பலதரப்பட்ட தீனிகளைத் திணித்து
வயிற்றை தோள் குப்பைத் தொட்டியாக
மாற்றியிருக்கிறோம்;

அதே உடம்பைப் பாடாய்ப் படுத்தி

போதை ஏற்றி,
கேளிக்கை விடுதிகளுக்கும்

சுற்றுலா விடுதிகளுக்கும் பயணப்பட்டு
நமது நலத்தையும்
நிலத்தின் இயல்பையும்

சீர்க்குலைக்கிறோம்;

தாங்கமுடியாத உடம்பு

நம்மிடமே கோபப்படும்போது
மருத்துவமனைகளில்
நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்;

தொல்லை தாங்காமல்

உடம்பு போராட்டமே நடத்தும்போது
மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;

இறுதியில் நம்மைச் சுமந்த
திசுக்கூட்டமான
உடம்பின் போராட்டம் வெற்றிபெறும்போது
காலத்திற்கு முன்னால்
உடலைக் காலவதியாக ஆக்கிவிட்டு
“நாம்” காணாமல் போகிறோம்.

– யூகி

 

You might also like