இலங்கை கடற்படைக் கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!

 செய்தி:

ராமேஸ்வரம் தாண்டிய பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த ஒரு கப்பல் மோதியதன் விளைவாக தமிழக மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த உயிரிழப்பைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் குடும்ப மயமாக எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கோவிந்த் கேள்வி:

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவது இன்று, நேற்றா நடந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்த இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தபோதிருந்தே தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதும் நூற்றுக்கணக்கானவர்களுக்கும் மேலானோர் தொடர்ந்து உயரிழிந்திருப்பதும் சிறைபிடிக்கப்படுவதும் இதுவரைக்கும் நிற்கவில்லை.

அதே சமயம் பாஜக ஆட்சி அமைந்த பிறகும் இலங்கை அரசுடன் நல்லறவை பேணுகிற விதத்திலேயே ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், ரோந்து பிரிவினராலும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள். தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள். தங்களுடைய படகுகளை இழக்கிறார்கள். அங்குள்ள சிறைகளில் அடைபடும் சூழ்நிலை அடிக்கடி உருவாகிறது.

உண்மையில் இந்த அளவிற்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு அரசுகளுக்கும் பொறுப்பிருக்கிறது இல்லையா?

You might also like