மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

 செய்தி:

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள் அமைப்புகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் சில தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டிருக்கின்றன.

கோவிந்த் கேள்வி:

உண்மையில் தமிழ்நாடு அரசுக்காகவும், அண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிற கேரளா மக்களுக்காகவும்தான் பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சாலைகளில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

இதற்கு திராவிட மாடல் அரசு என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு, தனக்கான கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறவர்களுக்கு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்க வேண்டும். அல்லது கூடவே திமுகவினரும் இணைந்து கூட்டணியாகப் போராடி இருக்கலாம். அதை விட்டுவிட்டுப் போராடுகிற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்படக்கூடிய அளவிற்கு கடுமை காட்டி இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

You might also like