சினிமாத்தனம் இல்லாத ‘அகரம்’ விழா!

ஓவியர் ஷ்யாம் ஷங்கர்

‘அகரம்’ பவுண்டேஷன் சார்பில் 45 ஆவது ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான விருது வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்றது. இதில், திரைக்கலைஞர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, ‘அகரம்’ பவுண்டேஷன் துவங்கியது குறித்து நெகிழ்ச்சியோடு பேசினர்.

நெகிழ்வான ஒரு தருணத்தில் அகரத்திற்கு ஆழமான விதைகளை விதைத்தது, மூவரின் பேச்சிலும் ஆலமரத்தின் செழுமையாகத் தெரிந்தது.

அதே விழாவில் 96 வயது நிரம்பிய மூத்த ஓவியர் மாயா அவர்களுக்கு ஒரு லட்சம் காசோலையுடன் அவரை கௌரவப்படுத்தி சிறப்பு செய்தார்கள்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி மேடையில் பேசிய மாயா, “நம் வேலையை நாம் ஒழுங்காக செய்து கொண்டிருந்தால் எல்லாம் தானாக நடக்கும்” என்றார். கைத்தட்டல்கள்  அரங்கம் நிறைந்தது.

சிவக்குமார் பேசும்போது, “இங்குள்ள மாணவ, மாணவிகள் என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கான காரணம் இருந்தது. சூர்யாவோ, கார்த்தியோ ஒரு நடிகனின் பசங்க. அதனால் அவர்கள் வசதி வாய்ப்புகளோடு இருந்தார்கள்.

ஆனால், தந்தையை இழந்த, ஒரு ஏழைத்தாயின் சிறுவனாக தான் பட்ட கஷ்டங்களையும் கல்விக்காகவும் சாப்பாட்டிற்காகவும் ஏங்கியதை எல்லாம் சொல்லும்போது நெகிழ வைத்தது.

தமிழக மாணவ மாணவிகளைத் தவிர அயல் நாட்டில் உள்ள ஒரு நேபாள மாணவி, அவள் மொழியில் சொன்னதை, கார்த்தி அதை அழகாக விளக்கி தமிழில் சொன்னார். அரங்கம் நிசப்தமாய் ஆனது அந்த மாணவி சொன்ன சோகம் ததும்பிய சொற்களைக் கேட்டு.

நான் மட்டும் சினிமாவிற்கு வரவில்லை என்றால், ஒன்றுமே இல்லாமல் ஆகியிருப்பேன். சினிமாத்துறை தான் இன்று அகரத்திற்கு உதவியாக இருக்கிறது என்ற சூர்யாவின் அடக்கமான பேச்சு பெரிய மேடையில் கம்பீரமாக இருந்தது.

பேராசிரியர் கல்யாணி அவர்களின் பேச்சில், அறம் தான் மனிதனின் மிகமுக்கியமான குணம் என்பதை உணர்த்தியது. கல்விதான் நல்ல மனிதனை உருவாக்கிறது. அதைத்தான் அகரம் பவுண்டேஷன்  சிறப்பாகச் செய்கிறது என்ற எதார்த்தமான பேச்சு அனைவரையும் சிந்திக்க செய்தது.

ஒரு செயலை செய்ய மனநிலை மிகப் பெரிய முக்கியமானது அதை சிவக்குமார் சாரிடம் இருந்து சூர்யாவிற்கும் கார்த்திக்கும் அதே மனநிலை தந்தையின் மனநிலையில் மகன்கள் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த காலத்தில் நடக்கும் விஷயமே அல்ல. எந்த இடத்திலும் சினிமாத்தனமே இல்லாத சிகரத்தைத் தொட்டது அகரம்.

நன்றி: முகநூல் குறிப்பு

You might also like