தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு!

புதிய தமிழகம் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியை, தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்தபோது முன்வைத்த கோரிக்கைகள்:

****

1) தேயிலை, ரப்பர், ஏலம் போன்ற பெருந்தோட்டங்கள் வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2) லட்சக் கணக்கான எழை, எளிய மக்கள் தங்களது உதிரத்தையும் வேர்வையும் சிந்தி பல கோடிகளை முதலாளிகளுக்கும், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பாதித்துக் கொடுத்துள்ளனர்.

3) தற்போது பெருந்தோட்டங்களை பொய்யான காரணங்களை காட்டித் தொழிலாளர்களை வெளியேற்றி காடாக மாற்றும் கொடுமை நடைபெற்று வருகின்றது.

4) இதில் முதலில் பாதிக்கப்பட்டது டேன்டீ தொழிலாளர்கள். தற்போது மாஞ்சோலைத் தொழிலாளர்கள்.

5) இன்றைய சமூக சூழ்நிலையில் இவர்கள் உழைத்து உறுவாக்கிய தேயிலைத் தோட்டங்களை இவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து, இதர வசதிகள் செய்து கொடுப்பதே நிரந்தர தீர்வாகும்.

6) இதனை VTMS தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகின்றது.

7) இதே கருத்தை வலியுறுத்தி 2024 ஜூலை-16, 17 தேதிகளில் Dr. கிருஷ்ணசாமி Ex- MLA (புதிய தமிழகம் கட்சி) உடன் இரண்டு நாட்கள் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

8) நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளிலும் தோட்ட நிலத்தை பிரித்துக் கொடுக்கக் கோருவது என முடிவு செய்யபட்டது.

9) இதற்கு வன உரிமைச் சட்டம் 2006 முழுமையாக பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

The forest rifgts under which the Manjolai estate can be claimed collectively by the 5 wards as community rights is under Sec 3(1)(l) (l) any other traditional right customarily enjoyed by the forest dwelling Scheduled Tribes or other traditional forest dwellers, as the case may be, which are not mentioned in clauses (a) to (k) but excluding the traditional right of hunting or trapping or extracting a part of the body of any species of wild animal;

10) இக்கூட்டத்தில் VTMS மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.K.A. சுப்ரமணியம், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு.வீரசிங்கம், திரு.சந்திரமோகன் மற்றும் சட்ட ஆலோசகர் திரு.CR. பிஜோய் கலந்து கொண்டனர்.

You might also like