தமிழர் நலன் எல்லாவற்றிலும் ஒன்றிணைவார்களா?

செய்தி:

காவிரி நீரைப் பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கோவிந்த் கேள்வி:

ஆச்சரியம் தான்! காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் மாநிலக் கட்சிகளின் குரல் ஒன்றாகவும் தேசியக் கட்சிகளின் குரல் வேறொன்றாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் காவிரி நீர்ப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து முதலமைச்சர் தலைமையில் கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

அபூர்வமாக பாஜக சார்பில் அதன் பிரதிநிதியாக கலந்து கொண்ட கருப்பு முருகானந்தம் திமுகவின் இந்த முடிவை வரவேற்று இருக்கிறார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவரான செல்வப் பெருந்தகையும் தமிழக முதல்வரின் முடிவை ஆதரித்திருக்கிறார்.

பாமகவும் ஆதரத்திருக்கிறது. இப்படி பல கட்சிகளும் ஒன்றுகூடி கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி இருப்பதெல்லாம் சரி.

இதே போன்ற ஒற்றுமை மற்ற விஷயங்களிலும் அனைத்துக் கட்சிகளிடமும் இருக்குமா?

தமிழர்கள் நலன் சார்ந்த எத்தனையோ பிரச்சனைகள் நமது ஒற்றுமையின்மையினால் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கின்றன. உதாரணம் மதுவிலக்கு.

மதுவிலக்கிலும் இதே மாதிரியான ஒரு அணுகுமுறையை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்றி நடைமுறைப்படுத்தினால், தமிழர்களின் வயிற்றில் உண்மையிலேயே பால்வார்த்த உணர்வு இருக்கும்… செய்வார்களா?

You might also like