எளிய மனிதனுக்கான எழுத்துக்களே இன்றைய தேவை!

புத்தகங்களைக் காதலிப்பவர்கள் தங்களுக்கான வாழ்தல் அடையாளங்களை மிகச் சீராக செப்பனிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் படைப்பவர்களானாலும், படிப்பவர்களானாலும் அவர்களோடு ஒருங்கே பயணிக்கும் புத்தகங்களானது சுயநோயெதிர்ப்புத் திறன் அணுக்களைப் போலச் செயல்பட்டு தற்கால மானுடவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனவலிமையை ஈந்து விடுகிறது என்பது மறுக்கவியலாக் கூற்று.

அவ்வகையில் படைப்புக் குழுமமானது சமூகத்தின் ஒவ்வொரு எளிய மனிதனுக்குமான எழுத்துக்களை மிக இலகுவான இலக்கிய வடிவில் புத்தகங்களாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

‘’நிலவு சிதறாத வெளி’’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு.

ஏற்கனவே வார இதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்ட இவர் இவரது ஒளிக் கோணங்களைப் போலவே வெகுநேர்த்தியாக கவிதைகளைப் படைத்திருக்கிறார். ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு இப்புத்தகம் பெருவிருந்து என்பது திண்ணம்.

இக்கவிதைகளை வாசித்து என்பதை விட இதனுள் வசித்து என்பதே பொருத்தமாக இருக்கும் என்னும் அளவிற்கு சீரிய அணிந்துரை வழங்கிய திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கு படைப்புக் குழுமம் தன் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.

 *****

நூல்: நிலவு சிதறாத வெளி
ஆசிரியர்: காடன்
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள்: 88
விலை: 70/-

You might also like