பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழத் தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#பிரிட்டன்_நாடாளுமன்றத்_தேர்தல் #தொழிலாளர்_கட்சி #பிரிட்டன்_பிரதமர்_கீர்_ஸ்டாமர் #உமா_குமரன் #முதலமைச்சர்_மு_க_ஸ்டாலின் #ஸ்ட்ராட்போர்ட்_தொகுதி #mp_uma_kumaran #uma_kumaran #uk_parliament_election

You might also like