சினிமா வாழ்க்கை எதுவரை?

மனம் திறந்த மம்முட்டி!

நாம் நிறைய சாதித்துவிட்டோம். சினிமா வாழ்க்கையை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று என்றாவது நினைத்துள்ளீர்களா? என்று நேர்காணல் ஒன்றில் நடிகர் மம்முட்டியிடம் கேள்வி கேட்கப்படுகிறது.

இல்லை என்று பளிச்சென பதிலளிக்கிற மம்முட்டி, சினிமாவில் நடிப்பதை நிறுத்துவது என்பது என்னுடைய கடைசி மூச்சை நிறுத்துவதை போன்றது’ என்று உணர்ச்சிவசமாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து கேள்வி கேட்கும் பேட்டியாளர் ”இந்த உலகம் உங்களை எப்படி நினைவு கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்’ எனவும் கேட்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் மம்முக்கா, ”அப்படி எத்தனை வருடங்கள் அவர்கள் என்னை நினைத்துக் கொள்வார்கள்? பத்து வருடம்? பதினைந்து வருடம்? அவ்வளவுதான். மிக மிக மிகச்சிறந்த மனிதர்களே காலம் முழுவதும் நினைவுகூறப்படுவார்கள்.

நான் அவ்வளவு முக்கியமானவன் இல்லை. ஆயிரம் நடிகர்களில் நானும் ஒரு நடிகன். நான் சீக்கிரம் மறக்கப்படுவேன். அவ்வளவே” என்று கூறி இருக்கிறார்.

மம்முட்டியின் இந்தப் பதிலால் நெக்குருகியுள்ள கேரளா ரசிகர்கள் ”சினிமா இருக்கும்வரை, சினிமா அழியும்வரை உங்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம் மம்முக்கா’ என்று சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள்.

நன்றி: முகநூல் பதிவு.

You might also like