தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “2021-ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4,97,437 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேபோன்று உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021-ல் 11 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 719 ஆக இருந்து 2022-ல் 21 கோடியே 85 லட்சத்து 84 ஆயிரத்து 846 ஆகவும், 2023-ல் 28 கோடியே 60 லட்சத்து 11 ஆயிரத்து 515 என உயர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.