கூத்துப்பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்கள்!

சாதாரணமாக சினிமாவில் நடிப்பவர்களின் பெயர்கள் பெரும்பாலும் நிஜப் பெயராக இருக்காது. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் இப்போதுள்ள நடிகர்கள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரண கணேசன் சிவாஜி நாடகத்தில் வீரசிவாஜியாக நடித்ததால் சிவாஜி கணேசன் என்றானார்.

சிவாஜி ராவ் ரஜினி காந்த் என்றானார். விஜயராஜ் விஜயகாந்த் ஆனார். அதேபோல் பாரதிராஜாவின் படங்களில் அறிமுகமான ஹீரோயின்கள், ஹீரோக்களுக்கு பெரும்பாலும் நிஜப் பெயர் வேறு இருக்கும்.

அவற்றில் ராதா, ரேவதி, நெப்போலியன், ராமராஜன், ரஞ்சிதா போன்ற நடிகர்களின் பெயர்கள் இதுவல்ல. ஏன் இப்போதுள்ள முன்னனி ஹீரோயினான நயன்தாராவுக்கே நிஜப் பெயர் டயானா மரியா என்பதாகும். இப்படிப் பல நடிகர்களின் லிஸ்ட் மிகப் பெரியது.

அந்த வகையில் இப்போதுள்ள விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் என்றிருந்தது.

எனவே இவர்களை சின்ன ரமேஷ், பெரிய ரமேஷ் என்று அழைத்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் சினிமா வாய்ப்பு வரவே முதன் முதலாக நடிக்கும் போது வேறு பெயர் வைத்து நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, விதார்த்  – அமலன் என்று வைத்திருக்கிறார். இதற்கு மாசற்றவன், தூய்மையானவன் என்று அர்த்தமாம்.

அதன்பின் நியூமராலஜி பார்த்து கூத்துப் பட்டறையில் இருந்த ஒருவர் இவர்களுக்கு விதார்த், விமல், விபின் ஆகிய பெயர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன்படி ரமேஷ்களில் ஒருவர் (விதார்த்) விமல் என்ற பெயரைப் பெயரைத் தேர்வு செய்தார்.

ஏனெனில் கமல், விமல் என்று உச்சரிப்பு நன்றாக இருக்கும், எளிதில் ஞாபகம் வரும் என்பதற்காக தேர்வு செய்ய மற்றொரு ரமேஷ் விமல் என்ற பெயரை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறி அந்தப் பெயரை வைத்திருக்கிறார்.

அதன்பின் மற்றொரு ரமேஷ் விதார்த் என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளார். விதார்த் என்பதற்கு வித்தைகளைக் கற்றவன் என்று பொருள்படுமாம்.

இப்படித்தான் விமல், விதார்த் ஆகிய ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாயினர். தற்போது இருவருமே நல்ல கதைக் களங்களைத் தேர்வு செய்து அவரவர் பாதையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

நன்றி: ஜான் அழகர்

You might also like