திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் கனிமொழி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களைப் பெற்று 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக் கைப்பற்றியது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழியும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர் பாலுவும், மக்களவைக் குழுத் துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும், மக்களவைக் கொறடாவாக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களவை குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவை குழுத் துணைத் தலைவராக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவைக் கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

You might also like