யாரையும் வெறுக்காதீர்கள்!

படித்ததில் ரசித்தது

எந்த ஒன்றையும் வெறுக்காதீர்கள். உங்களுக்கு நேர் எதிர்மறையான பொருளாக இருந்தாலும் சரி அல்லது மனிதர்களாக இருந்தாலும் சரி யாரையும் வெறுக்காதீர்கள்.

இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள நம்முடைய ஜீவ காந்த அலை வான்காந்த அலையோடும் பிரபஞ்ச நிலைகளோடும் மோதுகிறது. சிதறுகிறது. ஊடுறுவுகிறது. பிரதிபலிக்கிறது. இரண்டுக்கும் இடையே ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறக இயங்கும் காந்த ஆற்றலும் அதனுடைய மதிப்பும் அளவிட முடியாதது. வெறுப்புத் தன்மை முதலில் நம்முடைய உடலையும், மனதையும், உயிரையும், பாதிக்கிறது.

அதற்கு பின்புதான் அந்த பொருள் மீதும், அந்த நபர் மீதும் பாதிக்கும். விளைவை ஏற்படுத்தும். ஆகவே யாரையும் வெறுக்காதீர்கள். அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

வாழ்க வளத்துடன்.

– வேதாத்திரி மகிரிஷி

vels
You might also like