சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!

நூல் அறிமுகம்:

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இப்புத்தகத்தில் 16 கட்டுரையின் வழியாக ஒவ்வொரு தலைப்புகளையும் விளக்கியுள்ளார்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். மென்மேலும் நம்மை சிந்திக்க வைக்கும். இப்புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று.

1. தெரிந்து குற்றம்:

இந்த தலைப்பில் “ஏமாத்தறது தப்பு நீயே யாருக்குமே தோண மாட்டேங்குது?” என்று ஆரம்பித்து நம் வாழ்வில் நடக்கும் ஏமாற்றங்களை பற்றியும் நாம் ஏமாறுவதைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

2. ஒரு பிடி உதவி :

“உதவின்னு கேட்டா யாரு செய்யறா?” என்று ஆரம்பித்து உதவி பற்றிய அனைத்து விவாதங்களையும் முன்னிறுத்துகிறார்.

3. உள்ளும் புறமும்:

“இவ்வளவு செய்யறேன். ஆனாலும் என்னை யாரும் மதிக்கிறா?” இந்த தலைப்பில் மரியாதையின் மேல் ஏற்படும் கேள்விகளை குறித்து விளக்கியுள்ளார்.

4. கற்க மறந்த பாடம்:

“என்னை எதுக்குப் படிக்க வெச்சீங்க?” இன்று ஆரம்பித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் இக்கால கல்வி முறையைப் பற்றியும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்..

5. காக்கைக்கூடு:

“உங்களை எல்லாம் யாரும் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது?” என்று ஆரம்பித்து திருமண வாழ்வில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றும் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும், எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்..

6. சொல் புகாத இடம்:

“நெனச்சு நெனச்சு பேசினா எப்படி?” என்று ஆரம்பித்து நாம் சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம்.. நாம் பேசும் சொற்களால் ஏற்படும் மனக்கசப்புக்களையும் பிரச்சனைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்…

7. அறிந்த ஊர்:

“என்ன ஊர் இது மனுஷன் வாழ்வானா?” என ஆரம்பித்து ஒவ்வொரு ஊரின் முக்கியத்துவத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு ஊரும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விளக்கியுள்ளார்..

8. கற்பனையின் பூக்கள்:

“எதற்கெடுத்தாலும் பொய்யா? ” என ஆரம்பித்து நம் பொய்யின் கற்பனைத் திறனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பொய்யை தவிர்ப்பது எப்படி என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்…

9. மீதமிருக்கும் வலி:

“வாய்விட்டு எப்படிங்க கேட்கிறது?” என ஆரம்பித்து நமது விருப்பங்கள் எவ்வாறு வாழ்வில் நிறைவேறாமல் போகிறது, நம் விருப்பங்களை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்..

10. பசித்த வேலை:

“உன்னால் ஒருவேளை சாப்பாடு போட முடியுமா?” என ஆரம்பித்து உணவு பற்றிய முக்கியத்துவத்தையும் உணவால் ஏற்படும் மனக்கசுப்புகளை பற்றியும் விளக்கியுள்ளார்…

11. பெரிதினும் பெரிது கேள்:

“வீட்ல சும்மாவே இருந்தா எப்படி?” என ஆரம்பித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் பிடிக்காத வேலையை செய்யும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்..

12. கண்ணாடி சொல்லாதது:

“நான் அழகா இருக்கேனா?” என ஆரம்பித்து அழகு என்றால் என்ன? அவற்றை நாம் எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்? நம் மனதில் வைத்திருக்கும் அழகை பற்றிய பிம்பங்கள் அனைத்தையும் நம் முகஒப்பனை கலைந்து போகுமாறு விளக்கியுள்ளார்.

13. உடலுக்கு அப்பால்:

“எனக்குனு யாரு இருக்கிறா?” என ஆரம்பித்து நோயற்ற நிலையில் ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும்? அவரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.

14. உதிர்ந்த சிரிப்பு:

“ஏன் இப்படி இருக்கீங்க?” என்ற தலைப்பில் ஆரம்பித்து சுய அறிதல் பற்றியும், வாழ்வில் சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியுள்ளார்..

15. அறிந்த தவறு:

“எதுக்காக இவ்வளவு அவசரம்?” என ஆரம்பித்து இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோயாக இருக்கும் அவசரம் பற்றியும் அதனால் நம் வாழ்வில் இழக்கும் தருணங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

16. வானை அளப்போம்:

“ஒரு ஆளாலே என்ன செய்ய முடியும்?” என ஆரம்பித்து உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.

*****

நூல் : கேள்விக்குறி
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 104
விலை :100/-

#கேள்விக்குறி_நூல் #Kelvikuri_book #S_Ramakrishnan #எழுத்தாளர்_எஸ்_ராமகிருஷ்ணன் #எஸ்_ரா #S_Ra #writer_s_ra #எஸ்_ராமகிருஷ்ணன்

You might also like