கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்போம்!

நூல் அறிமுகம்:

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்பதையும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் ‘படித்தாலே இனிக்கும்’ என்ற இந்நூல் வலியுறுத்துகிறது.

திட்டமிட்டுப் படிப்பது, திடமாகப் படிப்பது, வரையறைகளோடு படிப்பது, காலத்தை அறுதியிட்டுக்கொண்டு படிப்பது என்று படிப்பதற்கான எளிமையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் விரிவான விளக்கங்களோடும் உதாரணங்களோடும் முன்வைக்கும் இந்நூல் படிப்பதைப் பற்றிய சிறந்த கையேடாகவும் திகழ்கிறது.

நூல்: படித்தாலே இனிக்கும்
ஆசிரியர்: இரா. ஆனந்தகுமார்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 124
விலை: ரூ.94/-

You might also like