கவிஞர் மு.மேத்தா அவர்களை 1986 பிப்ரவரி வாக்கில் இராயப்பேட்டை பீட்டர்ஸ் கலனியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். கடந்த 38 வருடங்களாக அந்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. அவரது எளிமை யாரையும் வியப்பிலாழ்த்தும்.
தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.
இப்பொழுதும்கூட அப்படியே! எனது கவிதை நூல் ஒன்றை அவருக்கு சமர்ப்பணம் செய்யும்போது ‘நண்பர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்வதற்காகக் கிரீடத்தைக் கழற்றிவைக்கிற கவிவேந்தர் மு.மேத்தாவுக்கு’ என்று குறிப்பிட்டேன். இதை கவிஞர் இந்திரனும் ஆமோதித்தார்.
எல்லோராலும் எப்போதும் கொண்டாடப்படவேண்டிய கவிஞர் அவர்.
இப்பொழுது எழுத வந்தவர்களெல்லாம் தலைக்கனம் பிடித்துத் தருக்கிக்கொண்டிருக்கிற இக்காலகட்டத்திலும் ஈகோ இல்லாத கவிஞராக விளங்குகிறார் கவிஞர் மு.மேத்தா.
நானும் கவிஞரும் பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஒரு கடையில் தேநீருக்காகக் காத்திருந்தபோது முனைவர் கவிஞர் இளையராஜா எடுத்த புகைப்படம் இது. கவிஞரின் எளிமைக்கு இந்த புகைப்படமும் ஓர் சாட்சி!
நன்றி: முகநூல் பதிவு.